செவ்வாய், 19 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 19:: பிடிபட்டோம்!


போன பதிவில் எழுதி இருந்த அரட்டை மூலை பற்றி மீண்டும் ஞாபகப் படுத்திக்குங்க.  

தினமும் சாப்பிட்டு முடித்தவுடன், எங்கள் அணி அப்ரெண்டிஸ் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து அரட்டை அடிக்க, ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தோம். ட்ரைனிங் செண்டர் செல்ல வேண்டியவர்கள், கம்பெனி பிரதான வாயிலில் நுழைந்தால், இடதுபுறம் திரும்பி, நீண்ட தூரம் நடக்க வேண்டும்.பெரும் தலைகள் இருக்கின்ற பகுதி பிரதான வாயிலில் நுழைந்து, சற்று தூரம் நடந்து, வலது புறம் திரும்பினால் போதும்.

ட்ரைனிங் செண்டர் ஆட்கள், பெரும் தலைகள் பெரும்பாலும் வராத இடம், படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நீல நிற இடம்.


இந்த இடம்தான் எங்களுடைய சீனியர் அப்ரெண்டிஸ்கள் அரட்டையடிக்க உபயோகித்த இடம் என்று காற்று வழி செய்தியும் உண்டு!


சாப்பாடு முடித்த பின், அரட்டை மூலைக்கு ஒவ்வொருவராக வருவோம். இருவர் அல்லது மூவராக அந்த இடத்திற்கு வந்தால் ஆபத்து. ட்ரைனிங் சென்டரில் இருக்கின்ற பாட்ரிக் என்னும் கழுகு கண்களில் நாங்கள் பட்டுவிட்டால், பேராபத்து. அவர் ட்ரைனிங் ஆபீசரிடம் சென்று, 'தஸ் புஸ்' என்று காற்றோடு ஆங்கிலத்தைக் கலந்து அவர் காதில் ஊற்றி, எங்களுக்கு உலை வைத்துவிடுவார்!


சற்றேறக் குறைய இரண்டு அல்லது மூன்று மாதங்கள், அரட்டை கச்சேரி (ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள், அதிக பட்சம் முப்பது நிமிடங்கள்) இனிதே நடந்து வந்தது. அந்த நேரத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் மற்றவர்கள் பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஏற்கெனவே ஒரு டிபார்ட்மெண்டுக்கு பயிற்சி சென்றவர்கள், அந்த டிபார்ட்மெண்டில் யார் அப்ரெண்டிஸ்களுக்கு அனுகூலமாக நடந்துகொள்பவர், யாரு கடி மனிதர் என்று மற்றவர்களுக்கு சொல்லுவார்.


மற்றவர்கள் அந்த டிபார்ட்மெண்டுக்கு ட்ரைனிங் செல்லும் பொழுது, எங்கே படலாம், எங்கே தொடலாம், யார் பக்கம் செல்லக்கூடாது என்று நன்கு தெரிந்து வைத்துக் கொள்வோம். மற்ற லோக விவகாரங்களும் பரிமாற்றம் நடைபெறும். (அப்பாதுரை சார்! கற்பனை குதிரையை ரொம்ப மேய விடாதீங்க! எல்லாமே சைவ சிந்தனைகள்தான்)

எப்படி பிடிபட்டோம்?

நாங்கள் பிடிபட்ட நிகழ்ச்சி சற்றும் எதிர்பாராத விதமாக நிகழ்ந்தது. மதிய உணவு வேளை முடிந்ததும், தன்னுடைய வொர்க் டயரியை ட்ரைனிங் ஆபீசர் பார்த்துக் கையெழுத்திட்டதை, திரும்பப் பெற சென்றிருந்தான், எங்கள் அணி நண்பன். அதை வாங்கிக் கொண்டு திரும்ப யத்தனித்தவனை, தடுத்து நிறுத்தியது, ஏ டி ஓ வின் குரல். ஏ டி ஓ = அசிஸ்டன்ட் ட்ரைனிங் ஆபீசர். யாருங்க அது? ஹி ஹி - நம்ம பாட்ரிக் அவர்களுக்கு நாங்க கொடுத்திருந்த பதவிப் பெயர் அது! கிளார்க் என்று சொன்னால் அவர் செய்கின்ற அலம்பல்களுக்கு அது சரியாக இல்லை என்பதால் இப்படித்தான் அழைத்து வந்தோம் அவரை!
     
"மிஸ்டர் ...... வுட் யூ மைன்ட் கிவிங் பேக் திஸ் டயரி டு மிஸ்டர் .......... இப் யூ ஹாப்பென் டு ஸீ ஹிம்?" என்று அரட்டை அணியின் மற்ற நண்பர் ஒருவருடைய டயரியை எடுத்து நீட்டினார். இந்த நண்பன், உடனே, 'எஸ் ஐ ஹாவ் நோ மைன்ட்' என்று பேத்தியவாறு, அதை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
   
பாட்ரிக்குக்கு ஒரே அதிசயம்! அப்ரெண்டிஸ்கள் யாரையாவது கம்பெனிக்குள் தேடவேண்டும் என்றால், அவருடைய உதவியின்றி, யாராலும் தேட இயலாது. யார் யாருக்கு எங்கெங்கே போஸ்டிங் போட்டிருக்கிறோம் என்பது அவருக்கு மட்டும்தான் (தன்னுடைய சித்ரகுப்தன் நோட்டு பார்த்து) தெரியும். அப்படி இருக்கையில், இந்த ஆள் டயரியை எடுத்துக் கொண்டு, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல நடந்து சென்றதைப் பார்த்தவுடன், ஒரு சிறிய சந்தேகம் வந்தது.  
     
பாட்ரிக், அருகில் இருந்த ட்ரேட் அப்ரெண்டிஸ் ஒருவரை அழைத்து, டயரியுடன் செல்கின்ற நண்பர் எங்கே போகிறார் என்று வேவு பார்த்து வந்து தன்னிடம் சொல்லச் சொன்னார். அசோக் லேலண்டில் ஆள்காட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. அந்த ஆ.கா. பாட்ரிக் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு, வந்து, பார்த்து, விவரங்களை பாட்ரிக்கிடம் கூறிவிட்டார்.
           
நாங்கள் செய்த புண்ணியம், அன்றைக்கு ட்ரைனிங் ஆபீசர் அலுவலகத்தில் மதியம் இல்லை. எங்கோ வெளி வேலையாக சென்றிருந்தார்.
           
பாட்ரிக் பின் வாசல் வழியாக எங்களின் அரட்டை மூலைக்கு வந்து, பத்து நிமிட கீதோபதேசம் நிகழ்த்தினார். 'மறுபடியும் எங்களில் யாரையாவது ட்ரைனிங் நேரத்தில் அங்கு கண்டால், அதை ட்ரைனிங் ஆபிசரின் கவனத்திற்கு உடனே எடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியிருக்காது' என்று அவர் சொன்னார் என்று அவருடைய தஸ் புஸ் மொழியை உரித்துப் பார்த்துப் புரிந்து கொண்டோம்.

                   

19 கருத்துகள்:

 1. காலை வணக்கம் கௌ அண்ணா...

  அரட்டையில் இப்படித் தகவல்களும் கிடைக்கும் தான்...யார் எப்படின்ற தகவல்கள்...இதைப் போய் அரட்டைன்றீங்களே!! //மற்றவர்கள் அந்த டிபார்ட்மெண்டுக்கு ட்ரைனிங் செல்லும் பொழுது, எங்கே படலாம், எங்கே தொடலாம், யார் பக்கம் செல்லக்கூடாது என்று நன்கு தெரிந்து வைத்துக் கொள்வோம். // ஹிஹிஹி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பரிவர்த்தனைகள் நெருங்கிய நண்பர்களுக்குள் நிகழும். என் (தற்போது ஸ்ரீரங்க கருடா அவென்யூ) நண்பன் ராகவேந்திரன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த டிபார்ட்மெண்டுக்கு ஒருநாள், இருநாள் பயிற்சிக்கு சென்றாலும், அந்த டிபார்ட்மெண்ட் ஆட்கள் பற்றி, நான் முன்பே சென்றிருந்த பகுதியாக இருந்தால், என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் செல்வான். எனக்கும் அவன் சென்ற சில பகுதிகள் பற்றி டிப்ஸ் கொடுப்பான்!

   நீக்கு
 2. 'எஸ் ஐ ஹாவ் நோ மைன்ட்'//

  அது சரி அந்த நண்பருக்கு பாட்ரிக் பற்றித் தெரிந்திருக்கவில்லையோ...உடனே திரும்பக் கேட்டிருக்கலாமோ? நீங்க கொடுக்கச் சொன்ன அந்த நபர் எங்கிருக்கிறார் என்று கேட்டிருக்கலாமோ அவரிடமே!!! ஓ அதான் அவர் பதட்டத்தில் சொல்லிட்டாரே 'ஐ ஹேவ் நோ மைன்ட் நு" ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் ஐ டி ஐ அப்ரெண்டிஸ் - வெளுத்ததெல்லாம் டிநோபால் என்று நம்புபவர். பாட்ரிக் போன்றே ஆங்கிலம் தாய்மொழி!

   நீக்கு
 3. பிடிபட்டாலும் உபதேசத்தோடு தப்பித்தீர்களே எல்லோரும்...வேறு வினை இல்லாமல்...

  நாங்களும் ஸ்கூல் டேய்ஸ்ல இப்படித்தான் மதியம் லஞ்ச் அவரில் அரட்டை ஒவ்வொரு டீச்சர், நண்பிகள் எப்படி யாரிடம் கேர்ஃபுல்லா இருக்கனும் போன்ற அரட்டை நடக்கும்...இதுக்குனே நிறைய ஸ்பை இருப்பாங்க எனக்கு ஆச்சரியமா இருக்கும் என் நண்பிகளை நினைத்து...

  தொடர்கிறோம்

  கீதா

  பதிலளிநீக்கு
 4. ஹாஹா... இப்படிக் காட்டிக் கொடுப்பதற்கென்றே சிலர் இருக்கிறார்கள்.

  உங்கள் அனுபவங்கள் படிக்கப் படிக்க, மேலும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கிறது!

  பதிலளிநீக்கு
 5. //யார் யாருக்கு எங்கெங்கே போஸ்டிங் போட்டிருக்கிறோம் என்பது அவருக்கு மட்டும்தான் (தன்னுடைய சித்ரகுப்தன் நோட்டு பார்த்து) தெரியும். அப்படி இருக்கையில், இந்த ஆள் டயரியை எடுத்துக் கொண்டு, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல நடந்து சென்றதைப் பார்த்தவுடன், ஒரு சிறிய சந்தேகம் வந்தது. //

  ஆஹா! ஆர்வகோளறூ நண்பரால் மாட்டிக் கொண்டீர்களா?
  அரட்டை மூலையை கலைக்கும்படி ஆச்சே!

  பதிலளிநீக்கு
 6. ஹாஹா! போட்டுக் கொடுத்திட்டாங்களா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தோஷத்துல எதுக்கு கிர்ர்ரர்ர்ர்ர் ?

   நீக்கு
  2. அதானே! எதுக்கு "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி"னேன்?மறந்து போச்சே! :))))

   நீக்கு
 7. எங்கும் ஆள்காட்டிகளுக்கு உடனடி முன்னேற்றம் உண்டு...

  பதிலளிநீக்கு
 8. உங்க நல்ல நேரம்... பாட்ரிக் கீதோபதேசத்தோட நிறுத்திக்கொண்டார். அதுக்கப்புறம் அந்த இடத்துக்குப் போகவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் அந்தப் பகுதியில் இருந்த எல்லா குப்பைப் பொருட்களையும் அகற்றி, அந்த இடத்தை ஒளிவு மறைவு இல்லாத இடமாகச் செய்துவிட்டார்கள். எங்களுக்கு ஒளிவதற்கு இடமில்லை என்றாகிவிட்டது!

   நீக்கு
 9. சிறப்பான பதிவு
  சிந்திப்போம்

  பதிலளிநீக்கு