சனி, 30 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 30 : ஆரம்ப காலத்தில் .....


அப்ரண்டிஸ் ஆக இருந்த பொழுது முதல் இரண்டு அல்லது ஒன்றரையாண்டுகள் பல பிரிவுகளிலும் பயிற்சி. மெஷின் ஷாப் முதல் அக்கவுண்ட்ஸ் செக்சன் வரையிலும் எல்லா பகுதிகளிலும் குறைந்த பட்சம் ஒருநாள் அதிகபட்சம் ஒருமாதம் என்று பயிற்சி உண்டு. (காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது)ஒவ்வொரு பகுதிக்கும் ட்ரைனிங் சென்ற நாட்களில் அங்கு அரட்டை அடிக்க சில ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். அதற்கு ஆள் பிடிப்பது ரொம்ப ஈசி.

அந்தந்தப் பகுதிகளில் உள்ள யாராவது ஒருவர், நீங்கள் யார், பெயரென்ன, எங்கிருந்து வருகிறீர்கள், எந்த ஊர் என்று ஏதாவது கேட்டுவிட்டால் போதும். விலாவாரியாக விவரங்கள் கூறி, அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டு, அவருடைய இண்டரஸ்ட் என்ன என்று தெரிந்துகொண்டு, அந்த சப்ஜெக்டிலேயே பந்து போட்டு, பந்தடித்து விளையாட ஆரம்பித்துவிடுவேன்.

ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு நண்பர் அதிக பட்சம் அந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லோரையும் நண்பராக்கிக் கொண்டுவிடுவேன். சந்தடிசாக்கில் நண்பருடைய பிறந்தநாள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வேன். டயரியில் எழுதி வைத்துக்கொள்வேன். பிறந்தநாளில் அவரை நேரில் சென்று கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வருவேன்.சூப்பர்வைசர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் (என்னுடைய பேட்ச் ஆட்களைத் தவிர) யாரும் சுலபமாகப் பழகமாட்டார்கள். அவர்கள் எல்லோரும் மேலதிகாரிகளுக்கு நிறைய பயப்படுபவர்கள். எனவே எனக்கு அதிக நண்பர்கள் தொழிலாளர் வர்க்கத்தினர்தான். அதிலும் குறிப்பாக செமி ஸ்கில்டு / அன் ஸ்கில்டு / காஷுவல் / தொழிலாளத் தோழர்கள் அதிகம். ஜாதி, மத, இன வித்தியாசமே கிடையாது. எல்லோரும் நன்கு பழகுவார்கள்.

நான் வடிவமைப்பு & அபிவிருத்திப் பகுதியில் நிரந்தர வேலை செய்ய ஆரம்பித்த பிறகு கூட, மற்றப் பகுதிகளில் ஏதேனும் வேலை ஆகவேண்டியிருந்தால், (உதாரணத்திற்கு) ஒரு சாம்பிள் பிராக்கெட் செய்ய ஸ்டீல் ப்ளேட் 7" X 8" தேவை என்றால், ஷியரிங் செக்சன் சென்று, அங்குள்ள நண்பரிடம் என் தேவையைக் கூறி, யாரிடம் கேட்டால் காரியம் ஆகும் என்று தெரிந்துகொண்டு அவரின் சிபாரிசோடு வேலையை முடித்துக்கொண்டு வருவேன்.
மெஷின் ஷாப்பில் ஓல்ட் மெஷின்ஷாப், நியூ மெஷின்ஷாப் என்று இரண்டு மெஷின்ஷாப்கள்.

அதில் ஓல்ட் மெஷின்ஷாப்புக்கு ட்ரைனிங் சென்றிருந்த பொழுது அங்கிருந்த ஒரு நண்பர், ஆரம்பக் காலத்தில் (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு / ஐம்பதுகளில்) லேலண்டு கம்பெனி எப்படி இருந்தது என்று விவரமாகச் சொன்னார்.

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


20 கருத்துகள்:

 1. மகிழ்வான காலை வணக்கம் கௌ அண்ணா.

  காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது// ஹா ஹா ஹா ஹா..

  அந்த சப்ஜெக்டிலேயே பந்து போட்டு, பந்தடித்து விளையாட ஆரம்பித்துவிடுவேன்.// ஹா ஹா ஹா செம தெக்கினிக்க்கி!! அப்படி நிறைய விஷயங்கள் தெரிந்தும் கொள்ளலாம் நட்பும் நிறைய இருக்கும். சில சமயங்களில் உதவிகளும் கிடைக்கும்தான்.

  நான் பள்ளி கல்லூரிகளில் இப்படித்தான் இருந்தேன். இப்பவும் கூட நட்பு வட்டம் உண்டு. நட்பின் சப்ஜெக்ட் தெரியவில்லை என்றால் அவரிடம் தெரிந்து கொண்டு நான் அதை கொஞ்சம் வாசித்து என்ன என்று தெரிந்து கொண்டுவிடுவேன். மேலும் அவரிடம் இருந்து கற்கவும் உதவும்..

  ஒருவர் சொல்வதை நாம் பொறுமையாகக் கேட்டாலே அவருக்குச் சந்தோஷமாக இருக்கும் தானே!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது.

  நட்பு, உறவு என்பதே வின் வின் சிச்சுவேஷனுக்கு நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டால் நன்றாக மெயிண்டெய்ன் செய்யலாம். எதிர்க்கருத்தையும் கூட பக்குவமாக மனம் நோகாமல் சொல்லுவது என்பதெல்லாம் இதில் அடங்கும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 3. எந்தச் சூழ்நிலையோடும் பொருந்திப்போகும் வண்ணம் உங்கள் இயல்பு அமைந்திருக்கிறது. கான்டீன் உள்பட. ஆனால் அங்கே ட்ரெயினிங் கொடுக்காமல் ஏமாத்திட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எப்படிப் பழகவேண்டும் என்பதையும் எப்படிச் சொன்னால் நம் வேலை முடியும் என்பதையும் அழகாய் எடுத்துக் கூறி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. காண்டீனில் மட்டும் பயிற்சி இல்லை! ஹாஹா....

  நினைவுகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 5. சென்னை பி & சி மில்லில் வேலை (Quality Control Dept.) பார்க்கும் போது, என் உயர் அதிகாரி சொன்னது :

  அனைத்து Department-களிலும் முக்கியமான தொழிலாளர்களின் பெயரை முதலில் ஞாபகம் வைத்துக்கொள்... அதிகாரி எனும் நினைப்புடன் எப்போதும் பேசாதே... முடிந்தால் அவர்களின் குடும்பத்தின் நிலைமையை அறிந்து கொள்... அவ்வப்போது அதையும் விசாரி... வாழ்த்து, பாராட்டு மட்டும் இல்லாமல் பிரச்சனை இருந்தால் ஆலோசனை சொல்ல தயங்காதே... பிறகு பார்... நாம் நினைக்காத ஒத்துழைப்பை அவர்கள் நமக்கு தருவார்கள்...

  பதிலளிநீக்கு
 6. எப்படி பழக வேண்டும் எப்படி நண்பர்கள் ஆக்கி கொள்ள வேண்டும் என்ற கலை அறிந்தவர் நீங்கள்.

  //அதிக நண்பர்கள் தொழிலாளர் வர்க்கத்தினர்தான். //
  அவர்களுடன் நட்பு வைத்துக் கொள்வது நல்லது தான்.

  பதிலளிநீக்கு

 7. // (காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது)//
  சாப்பாட்டுப் பயிற்சி இல்லையா?
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது எல்லா நாளிலும்! அங்கே நடைபெறுகின்ற ப்ராசஸ் பற்றி அறிய முடியவில்லை!

   நீக்கு
 8. ஆஹா.... எல்லா இடங்களிலும் ஆட்களைப் பழகிக்கொண்டால் நல்ல உபயோகம்தான்... ஆரம்ப காலத்தில் ஃபேக்டரியில் வேலை பார்த்தது நினைவுக்கு வருகிறது. என்ன செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை ஃபேக்டரிலதான் கத்துக்க முடியும், எல்லா நிலை மக்களும் இருப்பதால்.

  கேன்டீனுக்குப் போகும்போது எப்போதும் குறிப்பிட்ட ஆட்களோடே போகாமல், இவன் அவல்க ஆளு என்றெல்லாம் பிறர் சொல்லிவிடாமல் எப்படி சமாளித்தீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு நாளும் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட ஆட்கள் வந்துபோகும் காண்டீனில், யார், யாருடன் செல்கிறார்கள் / வருகிறார்கள் என்று யாராலும் அடையாளம் காண இயலாது. மேலும் அப்ரெண்டிஸ் காலத்தில், தொழிலாளர்களுடன் சேர்ந்து, காண்டீனின் ஒரே பகுதியில்தான் உணவு உண்ணவேண்டும்.

   நீக்கு
 9. காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது
  ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு