சனி, 2 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 02:: உதவிக்கு யாரையும் எதிர்பார்க்காதே!


பர்ஸ் காணோம் என்று தெரிந்தவுடன், பல கற்பனைகள். ஒரு வேளை அண்ணன் எக்மோர் ஸ்டேஷனுக்கு வரவில்லை என்றால், எப்படி பஸ் பிடித்து புரசவாக்கம் போய் சேருவது? 'புரச --- வா --- come' என்று சொல்லுமா அல்லது 'டேய் .போ .... go ...' என்று சொல்லுமா? பல வித சிந்தனைகளுடன் இடத்திற்கு வந்து, சோகமாக உட்கார்ந்துகொண்டேன்.



என்னுடைய கர்ண கடூரக் குரலில், டிரெயினிலேயே பாட்டுப் பாடி, நாலு காசு சம்பாதிக்கலாம் என்று கூட ஓர் ஐடியா வந்தது. ஆனால் என்னிடம், கையால் 'டிர்ர்ரக், டிர்ர்ரக்' என்று சத்தம் எழுப்புகின்ற தாளக் கருவி (யார் கண்டுபிடித்திருப்பார்கள் இதை!!) தயாராக இல்லை! ஒரு ரப்பர் பாண்ட் மட்டும் இருந்தது. பக்கத்து சீட்டு சாம்புவிடம், "சார்! ஒரு மாட்ச் பாக்ஸ் இருக்குமா?" என்று கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போனார். "லைட்டர்தான் இருக்கு" என்றார். சொல்லியதுடன் நிறுத்தாமல், அவருடைய பையை சீட்டுக்கு அடியிலிருந்து எடுத்து, அதில் ஏதோ தேட ஆரம்பித்தார்


"
எனக்கு காலி நெருப்புப் பெட்டி இருந்தால் போதும்" என்றேன்.

"
அது இல்லைங்க தம்பி. இது என்ன? என் பையில் எப்படி வந்தது? ..." என்று கேட்டார். அவர் கையில் என்னுடைய பர்ஸ் !பர்ஸ் பத்திரமாக இருக்கின்றது என்பது தெரிந்தவுடன், ஒரு கெத்து வந்துடுச்சு பாருங்க. எப்படியும் என்னிடம் வந்துவிடும் என்ற நம்பிக்கை! 'அவரே கண்டு பிடிக்கட்டும் என்னுடைய பர்ஸ்தான் என்பதை' என்று நினைத்து, வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்தேன்.



அவர் பர்சைத் திறந்தார். உள்ளே இருந்த படம் !! ஹி ஹி என்னுடைய படம் இல்லைங்க! சிக்கல் சிங்கார வடிவேலர் படம்!! அந்தப் படத்தைப் பார்த்தவுடன் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை

அவர் மேலும் ஆராய்ச்சி செய்து சிங்கார வடிவேலர் படத்துக்கு அடியில் இன்னொரு படம் இருக்கின்றதே, - அது என்ன என்று பார்க்க முயற்சி செய்த போது ... நான் அவசரமாகக் குறுக்கிட்டு "சார் அது என்னுடைய பர்ஸ். நான் நீங்க சொன்னது போல, சீட்டுல கர்ச்சீஃப் போட்டேன் இல்லையா - அப்போ பர்ஸ் கர்ச்சீஃபோடு வந்து கீழே இருந்த உங்க பைக்குள் விழுந்துடுச்சு போலிருக்கு.  பையில விழுந்ததால, சத்தமே வரலை, நானும் கவனிக்கவில்லை." என்றேன்.

நல்ல வேளை - அவர் சி சி படத்துக்குக் கீழே இருந்த படத்தைப் பார்க்கவில்லை. அது என்ன படம் என்று கேட்கின்றீர்களா? (அப்பாதுரைக்கு அஞ்சு சான்ஸ்!)

ஆனால் பர்ஸ், பணம் என்று எதையும் பற்றிக் கவலைப் படத் தேவை இல்லாமல் போய்விட்டது. ஸ்டேஷனுக்கு அண்ணன் வந்திருந்தார், என்னை புரசைவாக்கம் அழைத்துச் செல்ல!

========================================
அ லே வில் கற்றுக் கொண்ட இரண்டாவது பாடம்:அசோக் லேலண்டில்,'அப்ரெண்டிஸ் ஆக சேருகின்றேன் ' என்றவுடனேயே, ஒவ்வொருவர் அங்கு யாரைத் தெரியும் என்ற விஷயங்கள் நிறைய சொன்னார்கள். அப்படி காற்றுவாக்கில் வந்த ஒரு தகவல்: 'எனக்கு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில், இரண்டு வருடங்கள் சீனியர் ஆக இருந்த டி எஸ் ராஜகோபாலன் (என்னுடைய அண்ணனின் வகுப்புத் தோழன்) அங்கு ஏற்கெனவே அப்ரெண்டிஸ் ஆக இருக்கின்றார்' என்பதுதான்.

வேலையில் சேர்ந்த இரண்டு வாரங்களுக்குள், அவர் எந்த டிபார்ட்மெண்டில் இருக்கின்றார் என்ற விவரம் தெரிந்து கொண்டு, அவரைத் தேடித் தேடி, அவரை ஒரு நாள் காண்டீனில் சாப்பாட்டுக் கியூவில் நின்று கொண்டிருக்கும் பொழுது கண்டுபிடித்தேன்.



"
விஸ்வேஸ்வரன் தம்பிதானேடா நீ! இங்கே சேர்ந்துட்டியா? வெரி குட். இது நம்ப ஊரு போல இல்லை. எவனும் நமக்கு தேடி வந்து எந்த உதவியும் செய்ய மாட்டான். அவனவன் தன் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு, போய்கிட்டே இருப்பான். நீயும் அதே போல இருக்கக் கத்துக்க. மற்றவர்களிடம் எந்த உதவியும் எதிர் பார்க்காதே."நான் அப்படி மற்றவர்களுக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் 'அவனவன் தன் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கினே இருப்பான்' என்று டி எஸ் ஆர் சொன்னது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்பதை அடிக்கடி உணர்ந்தேன்.

============================================ 


கொசுறு:
ஒரு டீ எட்டு பைசா. ஒரு இட்லி எட்டு பைசா. ஒரு வடை எட்டு பைசா. ஒரு பொங்கல் பதினாறு பைசா! ஒரு பூரி செட் பதினாறு பைசா. சாப்பாடு நாற்பது பைசா. நான் சேர்ந்த பொழுதும், அதற்குப் பின் அங்கு நான் வேலையில் இருந்த முப்பத்தைந்து ஆண்டுகளிலும் அதே விலைதான்







57 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் கௌ அண்ணா...

    நான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

    வரேன் பதிவு வாசித்துவிட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ எப்போ இந்த அசம்பாவிதம் நடந்துதூ ஜொள்ளவே இல்ல:)).. இன்று மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ அஞ்சு இன்னும் வரேல்லை எல்லோ.. பொதுவா நம்ம ஏரியா போஸ்ட் எனில் அஞ்சுமூலம்தான் அறிவேன்.. இன்று மீதான் 1ஸ்ட்டூஊஊஊ:)..

      நீக்கு
    3. அப்படியா! மார்ச் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போஸ்ட். இந்திய நேரப்படி காலை ஐந்து முப்பதுக்கு வெளியாகும்.

      நீக்கு
    4. //இந்திய நேரப்படி காலை ஐந்து முப்பதுக்கு வெளியாகும்.//
      அதாவது ஸ்ரீராமின் போஸ்ட் க்கு சரியா அரை மணி நேரம் முன்பாக??? ஹா ஹா ஹா சபாஸ் சரியான போட்டீஈஈஈஈஈ.. அப்பூடித்தான் விடாதீங்கோ கெள அண்ணன்.. முன்னே வச்ச காலைப் பின்னே எடுத்திடக்கூடாது:).. மீயும் டெய்லி அஞ்சு மணிக்குப் போஸ்ட் போடப்போறேன்ன்.. என அஞ்சு மணியில, அஞ்சு துண்டு போட்டு வைக்கிறேன்:)).. இனி ஆரும் போடுவதாயின் 4.30 க்குப் போடட்டும்:))

      நீக்கு
    5. தினமும் காலை இந்திய நேரப்படி ஐந்து முப்பது என்பதில் ஒரு தாத்பரியம் இருக்கு. இந்திய நேரம் என்பது, Greenwich mean time + 5.30 hours. So, number of visitors for the blog in a day என்கிற கணக்குப் பார்க்கும்போது, அன்றைய விசிட்டர்களின் எண்ணிக்கை சரியாகக் கணக்கிடலாம்.

      நீக்கு
  2. முதல்ல கண்ணுல பட்டது அந்த இட்லியும் பூரியும் தான்...ஹா ஹா ஹா

    ஆ ஆ ஆ ஆ ஆ மயக்கமே வந்துருச்சு 35 ஆண்டுகளும் அதே விலையா...ஆஆஆஆஆஆஆ...மயங்கிப் போயிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
    2. எனக்கு அந்த இட்டலி மட்டும்தான் கீதா... பார்க்கவே சூப்பரா இருக்கு. இன்று எங்கட வீட்டில் கினோவா ஓசை:) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. பூப்பூக்கும் ஓசை கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன கிநோவா ஓசை?

      நீக்கு
    4. ஹாஹா, கேஜிஜி சார், அதிரா தமிழ் இது! கிட்டத்தட்ட நம்ம ஊர் தினை மாதிரி வெளிநாடுகளில் கினோவா என்னும் தானியம் கிடைக்கும். நம்ம தீர்க்கதரிசி அதில் தோசை செய்து சாப்பிட்டிருக்காங்க! அதான் ஒரே பீத்தல் தாங்கலை! :)))))))

      நீக்கு
    5. ஹா ஹா ஹா கீசாக்கா சோட் காண்ட் படிச்சதால, என் பாஷையை எல்லாம் ஈசியாக் கண்டு பிடிச்சிடுறா:))

      நீக்கு
  3. புரச...வா கம் ஹா ஹா ஹா ஹா இதுதான் கௌ அண்ணாவின் சிக்னேச்சர்!!!!!

    க கொ கு வில் பாட்டு பாடி சம்பாதிப்பது....அந்த டிர்க்டிர்க்.....ஹா ஹா ஹா

    அந்த சிக்கல் சிங்காரவேலனின் படத்துக்கு அடியில் இருந்தது ஹிஹிஹிஹிஹி சிக்கல் படமோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் கௌ அண்ணா சென்னையைப் பற்றி சொன்னது...மீக்கும்... இந்தியாவின் தென் கோடி மூலையில் இருந்து ஒரு குக் கிராமத்திலிருந்து சென்னை வந்தப்ப அதுவும் கல்யாணமாகி.... கொஞ்சம் திணறித்தான் போனேன்..(அதுக்கு முன்ன ஒரே ஒரு முறை ஒரு தேர்வு எழுத வந்தப்பவும் அதே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு முன்பே சென்னைக்கு விடுமுறை நாட்களில் வந்து கொஞ்சம் கொஞ்சம் இடங்களைப் பார்த்திருக்கிறேன் என்றாலும், பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு வருகின்ற மணமகளைப் போன்று ஒரு அச்சம்!

      நீக்கு
  5. அறுபதுகளின் ஆரம்பத்தில் தான் சென்னை முதல் விஜயம். அண்ணா, தம்பிக்குப் பூணூல் கல்யாணம் திருப்பதியிலே. எனக்கு அப்போப் பத்து வயசு இருக்கலாம். அப்போவே சென்னையைப் பிடிக்காமல் போயிடுச்சு! காரணம் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் பாருங்க கல்யாணம் ஆகிப் புனே போகப் போறோம்னு சந்தோஷமா இருந்த என்னைச் சென்னை தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டது! :))) சென்னையில் தான் முதல் முதல் தனிக்குடித்தனம் ஆரம்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். சில பாடங்கள் நமக்குப் பிடிக்காது போவது போல, சில ஊர்களும் நமக்குப் பிடிக்காமல் போவதற்குக் காரணங்கள் இருக்கும். ஆனால், எனக்கும் என் தம்பிக்கும் ஆரம்பகாலத்திலிருந்தே சென்னை என்றால், சொர்க்க பூமிதான். ஏரோடிராம், கிண்டி பார்க், மெரீனா, ஜூ, கிரிக்கட், மியூசிக் அகடெமி என்று பலப்பல அட்ராக்ஷன், ஆர்வம் எங்களுக்கு இருந்தது, இப்பவும் இருக்கு!

      நீக்கு
    2. கேஜிஜி சார்... எனக்கும் என்னவோ மனசளவுல பெங்களூர் பிடிக்கலை... இதுக்கே ஏதேனும் முன்ஜென்ம காரணங்கள் இருக்குமோ? (அதாவது கீசா மேடம் முன் ஜென்மத்தில் சோழ நாட்டு ராஜா படையில் பணியாற்றி சண்டைல சென்னைப் போரில் கேவலமாத் தோற்றுப் போனதால் சென்னையே பிடிக்காம்ப் போயிருக்குமா? சென்னைனா அந்த ஏரியால நடந்த போர்)

      நீக்கு
    3. நெல்லைத் தமிழரே, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் பாண்டிய நாடு தான். ஆனால் பாருங்க 2,3 ஜோசியர் 2 கைரேகை பார்ப்பவர்கள், ஒரு நாடி ஜோதிடர் எல்லோரும் எனக்கு அடுத்த பிறவியே இல்லைங்கறாங்க! அதான் கவலையா இருக்கு! :)))))

      நீக்கு
  6. அப்போப் பிரபலமான நடிகை யாருனு தெரியலை. அந்த நடிகையோட படம் தான் சி.சி. படத்துக்கு அடியில் ஒளிஞ்சுட்டு இருந்ததோ? அப்பாதுரை இங்கே எங்கே வரப் போறார்? அவர் வாட்சப்போடு நிறுத்திக் கொண்டு விட்டாரே! :))))) முன்னால் எழுதின பதிவிலும் அவரைத் தான் கேட்டிருந்தீங்க! :)))) இப்போவும் அப்படியே காப்பி, பேஸ்ட்! :))))))ஆனாலும் சுவாரசியம் குன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இந்தக்கால நடிகைகளையே அடையாளம் தெரியாது! அப்படி இருக்கையில் ....... !!

      நீக்கு
    2. ////உங்களுக்கு இந்தக்கால நடிகைகளையே அடையாளம் தெரியாது! அப்படி இருக்கையில் ....... !!/////

      ஆவ்வ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ்வ்வ் என் இன்றைய நாளையே இந்த ஒரு வசனம் கீசாக்காவுக்குச் சொன்னதால, ஆப்பி ஆக்கிட்டீங்க அவ்வ்வ்வ் அண்ணன்:)) ஹா ஹா ஹா சந்தோசம் பொயிங்குதே சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் மூக்கில் பொயிங்குதே..:) ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. பொயிங்கும், பொயிங்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்லா மாட்டி விட்டுட்டார் இந்த கேஜிஜி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))))

      நீக்கு
  7. டி.ஆர்.ராஜகுமாரியோ...?

    35 ஆண்டுகள் அதே விலை... ஆச்சரியம் தான்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா டி ஆர் ராஜகுமாரியா! கடவுளே! கடவுளே! நான் எங்கேயாவது அது ஒரு நடிகையின் படம் என்று சொல்லியிருக்கேனா!

      நீக்கு
  8. மேலும் டி ஆர் ராஜகுமாரிக்கு அன்றைய தேதியில் ஐம்பது வயது.

    பதிலளிநீக்கு
  9. //(அப்பாதுரைக்கு அஞ்சு சான்ஸ்!)//

    அப்பாடா நாங்க தப்பிச்சோம்ம்.. அப்பாதுரை மாட்டீஈஈஈஈ:) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீர்க்கதரிசி .... இது பழைய பதிவு. அந்தக் காலத்தில் அஞ்சு சான்ஸ் என்பது எங்கள் பிளாகில் பிரபலமாக இருந்த ஒரு சொற்றொடர்!

      நீக்கு
    2. இதோ இந்தப் பதிவைப் படித்தால் அஞ்சு சான்ஸ் மகத்துவம் புரியும்!

      http://engalblog.blogspot.com/2012/05/blog-post_08.html

      நீக்கு
    3. இந்தச் சுட்டியை என்னோட பதிவிலே கூடக் கொடுத்திருப்பேனே! பார்க்கலையா ஶ்ரீராம்!

      நீக்கு
    4. அங்குபோய்ப் படிச்சுப் பதிலும் போட்டேன்ன்.. சிலபேர் 2018 யூன்.. டிசம்பரிலும் அங்கு வந்திருக்கிறார்கள்:)..

      இனி இந்த அஞ்சு சான்ஸ் ஐ வச்சு நானும் கொஞ்சக் காலம் பொழுதை ஓட்டிடுவேன்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
  10. //இது நம்ப ஊரு போல இல்லை. எவனும் நமக்கு தேடி வந்து எந்த உதவியும் செய்ய மாட்டான். //

    இப்போ நம்ம ஊர்களும் இதைவிட மோசமாகிவிட்டதென்றுதானே எல்லோரும் அழுகின்றனர்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி சொல்லிவிட முடியாது. கிராமங்களில் இன்றும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக உள்ளனர்.

      நீக்கு
    2. இப்போவும் மதுரை நகரில் உதவி செய்வதில் முன்னணியில் இருக்கின்றனர். ஆனால் கோயிலில் தான்! :((((( அது ஊர் மக்கள் கைகளில் இல்லை!

      நீக்கு
  11. 35 ஆண்டுகளாக அதே விலையிலோ? கொஞ்சம்கூட நம்பும்படியாக இல்லையே.. ஒரு 5,6 வருடமெனில் நம்பலாம்..

    // My Ashok Leyland experience//

    ஹா ஹா ஹா நீண்ட நாளாகிட்டுதென தூசு தட்டினனீங்களோ கெள அண்ணன்?:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக நூலில் இந்தப் பதிவுக்கு, அசோக் லேலண்டு நண்பர் ஒருவர் கூறியிருக்கிறார், இன்றும் அதே விலைதானாம்!

      நீக்கு
    2. தீர்க்கதரிசி, டிவிஎஸ், அசோக் லேலண்ட், சிம்ப்ஸன்ஸ்,டாட்டா க்ரூப் போன்ற பழமையான கம்பெனிகளில் ஊழியர்களுக்கு இம்மாதிரிக் குறைந்த விலையில் நல்ல சாப்பாடாகவே தருகின்றனர். இன்றளவும் அது தொடர்ந்து வருகிறது. புதுசா முளைச்ச காளான்களில் எல்லாம் கான்ட்ராக்ட்! சரவண பவன், அஞ்சப்பர் போன்ற கடைகள்! :( இதில் சரவண பவன் பரவாயில்லை ரகமாக இருந்து இப்போ மோசமாப் போயிருக்கு.

      நீக்கு
    3. ஓ அப்படி எனில் ஆச்சரியம், பாராட்டப்படவேண்டிய விசயம்.

      நீக்கு
  12. படிக்க இப்போவும் இன்டெரெஸ்டிங் ஆகத்தான் இருக்கு. நான் 35 பைசா, 1 ரூபாய்னு கெம்பிளாஸ்ட் ஃபேக்டரியில் 90களில் சாப்பிட்ட நினைவைக் கொண்டுவந்தது. எனக்கு மட்டும் மூன்று வேளையும் சாப்பிட பெர்மிஷன் கொடுத்தார்கள் (pure veg வெளியில் எனக்குக் கிடைக்காத்தால்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழனோ? பேக்கரி ஓனரோ கெள அண்ணன்?:) தெளிவாச் சொன்னால்தானே ஒரு சுவீட்16 க்குப் புரியும்:)))

      நீக்கு
  13. இங்கு மெயில் நோட்டிபிகேசனைக் கிளிக் பண்ணி விட்டேன், ஆனா மெயிலுக்கு எதுவும் வருகுதிலையே.. எனக்கு மட்டும்தான் இப்படியோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ எல்லாம் யாருக்குமே மெயில் நோடிபிகேஷன் வருவதில்லை.

      நீக்கு
    2. ஓ ஏன் அப்படி, இந்த “நம்ம ஏரியா” வில் மட்டும் தான் இப்படி இருக்கு.

      நீக்கு
  14. ஆவ்வ்வ்வ் இப்போதானே பார்கிறேன் இது மார்ச் மாதத்தின் மூன்றாவது போஸ்ட்டோ? இன்றுதானே என் கண்ணில் பட்டுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் போஸ்ட் பெப்ரவரி இருபத்தெட்டு, முன்னுரை. அடுத்தடுத்து மார்ச் ஒன்று முதல் முப்பத்து ஒன்று வரை ஒவ்வொன்றாக வெளியாகும்.

      நீக்கு
  15. இந்த விலை அ.லே. தொழிலாளர்களுக்கு மட்டும்தானோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! காண்டீனில் வெளியாட்கள் நுழைய இயலாது. சில சமயங்களில் - ஆட்கள் அதிகம் வராத நாட்களில் உணவுப் பொருட்கள் மிஞ்சிப்போனால், அவற்றை அக்கம்பக்கத்தில் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக நிர்வாகத்தினர் வழங்குவதைப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  16. //அவனவன் தன் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு, போய்கிட்டே இருப்பான். நீயும் அதே போல இருக்கக் கத்துக்க.//

    நல்ல அறிவுரைதான். கடைபிடிப்பது கொஞ்சம் சிரமம் இருந்து இருக்கும் இல்லையா?
    கேட்காமலே உதவி செய்வது, கேட்டவுடன் உதவி செய்வது என்று சிலருக்கு குணங்கள் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி, ஆனால் வெளியுலகத்தில்தான் அப்படி. தொழிற்சாலைக்குள் அவரவர் தம் வேலையைப் பார்த்துக்கொண்டு போவதைத்தான் நான் கண்கூடாக உணர்ந்தேன்.

      நீக்கு