படைப்பாற்றல் பயிற்சி இரண்டு பகுதிக்கு வந்த எல்லா யானைகளையும் ஏன் ஒரு பதிவாக வெளியிடவில்லை என்று எல்லோரும் அலை, தொலை, வலை மூலமாக தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ராமலக்ஷ்மி மேடம் சொன்னது மாதிரி பாட்டுப் பாடி விட்டு சென்ற ஜெகநாதன் எப்போது யானையை அனுப்புவார் என்று வலை மீது கண் வைத்துக் காத்திருந்தோம். யானை வரும் பின்னே, காலடி ஓசை வரும் முன்னே என்று பார்த்தால் எங்களுக்குக் காதும் கேட்கவில்லை, கண்ணும் பூத்துப் போய்விட்டது.
ஒரு நண்பர் எவ்வளவு முறை முயன்றாலும், யானை வரவில்லை, மிக்கி மவுஸ்தான் வருகிறது என்று எழுதியிருந்தார். அதையாவது அனுப்பி வையுங்கள் என்று கேட்டால் அவர், 'நீங்க அடுத்த பயிற்சியாக மிக்கி மவுஸ் படம் போடக் கற்றுக் கொடுங்கள் அப்போ நான் வரைந்த எலி ஃபண்ட் படத்தை அனுப்புகிறேன்' என்கிறார்.
சரி இனிமே வெயிட் பண்ண வேண்டாம் என்று இதோ வந்த படங்களை வெளியிட்டுவிட்டோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக