நான் பார்த்த பிரபுதேவா படம் ஒன்றில் ஒரு சுவையான காட்சி ஞாபகம் வருகிறது. கௌசல்யா பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்.
"மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி ......."
திடீர் என்று பவர் கட் (அட இந்த சமாச்சாரம் அந்தக் காலத்திலேயும் இருந்துருக்கு!)
ஆனா - என்ன ஆச்சரியம்! பி சுசீலா குரல் மட்டும் பாடல் நின்ற இடத்திலிருந்து தொடர்ந்து ஒலிக்கும், வீட்டிற்கு வெளியில் இருந்து!
கௌசல்யா திகைத்துப் போய் கதவைத் திறந்தால் அங்கே சாட்சாத் பி சுசீலா - புன்னகையுடன் அந்தப் பாடலைப் பாடியபடி நின்றுகொண்டு இருப்பார். மெய் சிலிர்க்கும், கௌசல்யாவுக்கும், நமக்கும்.
பத்மா அவர்கள் என்னதான் இது அவர் பாடியது என்று சொன்னாலும், எங்களுக்குக் கொஞ்சம் சந்தேகமாகத் தான் உள்ளது. 'ஒருவேளை இது பி சுசீலா அவர்கள் பத்மா வீட்டிற்கு வந்த சமயம் பாடியதோ?' என்று.
(நீங்களும் கேட்டுப் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.)
ஆஹா பிரமாதம்.
பதிலளிநீக்கு